Monday , September 28 2020
Breaking News

சீனாவின், ஷாங்காய் நகருக்கு அருகே, இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின், ஷாங்காய் நகருக்கு மிக அருகே, இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று பரவத் துவங்கிய பின், அமெரிக்கா – சீனா இடையே, முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.

அமெரிக்காவில், ஹூஸ்டன் நகரில் உள்ள, சீன துாதரகத்தை, அமெரிக்கா சில நாட்களுக்கு முன்னர், அதிரடியாக மூடியது. இதற்கு பதிலடியாக, சீனாவின் செங்டு நகரில் உள்ள, அமெரிக்க துாதரகத்தை, சீனா மூட உத்தரவிட்டது.

இந்தநிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான, பி – 8ஏ மற்றும்; இ.பி. – 3இ ஆகிய, இரண்டு போர் விமானங்கள், தாய்வான் கடல் பகுதியில் இருந்து, சீனாவின் ஸேஜியாங் மற்றும் புஜியான் கடல் பகுதிக்குள், நேற்று முன்தினம் நுழைந்துள்ளன.
சீன வர்த்தக தலைநகராக கருதப்படும், ஷாங்காய் நகரில் இருந்து, 76 கி.மீ., தொலைவில், இந்த விமானங்கள் பறந்து சென்றுள்ளன.

சீன நகருக்கு மிக அருகே, அமெரிக்க போர் விமானங்கள் பறந்தது, இதுவே முதல் முறை என, கூறப்படுகிறது.

இதனால் அமெரிக்க – சீன முரண்பாடுகள் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் ஷாங்காய் நகருக்கு அண்மையில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்து சென்றமை தொடர்பாக, சீனா எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *