Wednesday , September 30 2020
Breaking News

யாழ் வடமராட்சி பகுதியை சேர்ந்த மீனவர் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக பளை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரண்டு மீனவர்கள் ஒரு படகில் தொழிலுக்கு சென்றுள்ளனர். குறித்த படகு கவிழ்ந்த நிலையில் தொழிலுக்கு சென்ற ஒரு மீனவர் கரை திரும்பியுள்ளார். இந்த நிலையில் மற்றைய மீனவர் இன்னும் கரை திரும்பாத நிலையில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவரிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் ஆரம்பித்துள்ளதுடன், மீனவரை தேடும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த மீனவர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என பொலிார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *