Monday , September 28 2020
Breaking News

வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – யாழ். ஆயர் வேண்டுகோள்.

நாடாளுமன்றத் தேர்தலில், அனைவரும் தமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த யாழ். ஆயரிடம், தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்ட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அனைவரும் தமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

உங்களுக்கு சேவை செய்யக் கூடிய சரியானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப, கட்டாயம் தேர்தலில் பங்குபற்ற வேண்டும், என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா தொற்று அச்சமின்றி வாக்களிக்கும் வாய்ப்பை பாவித்து எங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *