Monday , September 28 2020
Breaking News

வவுனியா – பறநட்டகல் பகுதியில் காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

வவுனியா – பறநட்டகல் பகுதியில் காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவிலிருந்து ஓமந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து. கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்தது. இதன்போது டிப்பர் சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *