Monday , September 28 2020
Breaking News

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

கொரோனா தொற்றில் தடுப்பு நடவடிக்கைக்கான தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், பொலிசாரும், இராணுவத்தினரும் அதிகளவில் நிறுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரேபக்தர்கள் ஆலயத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நல்லூர் ஆலயப் பகுதியில் 500இற்கும் அதிகமான பொலிசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், அடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பணிகளுக்கு அதிகளவு பொலிசார் தேவைப்படுவதால், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிசாரில் கணிசமானோர் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்படவுள்ளனர்.

நல்லூரில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிசாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அங்கிருந்து விலக்கப்பட்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி தொடக்கம் தேர்தல் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுக்குப் பதிலாக நல்லூரில் இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வார காலத்துக்கு இராணுவத்தினரே நல்லூர் ஆலயப் பகுதியில் அதிகளவில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *