Wednesday , September 30 2020
Breaking News

இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கையெழுத்திட்ட உடன்பாட்டுக்கு அமைய, 400 மில்லியன் நாணய மாற்று கடன் வசதியை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, 1 பில்லியன் டொலர்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.

.இதுதொடர்பாக, இந்தியாவின் றிசேவ் வங்கி அதிகாரிகளுடன், இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

இருதரப்பு நாணய மாற்று உடன்பாட்டின் கீழ் இந்த நிதி கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே நாணய மாற்று உடன்பாட்டுக்கு அமைய இணங்கிக் கொள்ளப்பட்ட 400 மில்லியன் டொலர்களை, இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவுகளை செலுத்தவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *