Friday , September 25 2020
Breaking News

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

வர்த்தக கப்பல் மாலுமி போன்று போலியாக தயாரித்த ஆவணங்களை ஒப்படைத்து, ஐரோப்பிய நாடு ஒன்றுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த, 36 வயதுடைய இளைஞன் என்று, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர், இன்று அதிகாலை 3.15 மணியளவில் டோஹா நோக்கி புறப்படவிருந்த விமானத்தில் பயணிக்கவிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *