Thursday , September 24 2020
Breaking News

யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகாலை முதல் கொட்டிய மழை – விவசாயிகள் பாதிப்பு.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் இன்று அதிகாலை தொடக்கம் மழை பெய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணி வரை குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

அதற்குப் பின்னர் தூறல் மழையுடன் கூடிய கால நில காணப்படுகிறது. இடையிடையே கடும் காற்றும் வீசி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று அதிகாலையில் இருந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் மேகமூட்டத்துடனும் சிறியளவிலான மழையுடனும் கூடிய காலநிலையே நிலவி வருகிறது.

இன்று பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ள அதேவேளை அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் கடும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று வெளியிட்ட தகவலின்படி அதிகபட்சமாக முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் 93.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையினால் வயல் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *