Thursday , September 24 2020
Breaking News

இன்றிரவு இந்தியா வரும் ரபேல் போர் விமானங்கள் – மெழுகுவர்த்தி ஏற்றி வரவேற்குமாறு கோரிக்கை.

பிரான்சிடம் கொள்வனவு செய்யப்பட்ட ரபேல் போர் விமானங்கள் இன்று இரவு இந்தியாவை வந்தடையவுள்ளன.

இதனை முன்னிட்டு இந்த விமானங்களை தரையிறங்கவுள்ள ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட ஐந்து, ரபேல் போர் விமானங்களும், நேற்று முன்தினம் அங்கிருந்து புறப்பட்டன. 7,000 கி.மீ. தூரத்தை கடந்து, இன்று இரவு 7 மணிக்கும் 7.30 மணிக்கும் இடையில் இந்தியாவை வந்தடையவுள்ளன.

இந்த போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்காக, பிரான்ஸ் விமானமும் உடன் வருகிறது.

வழியில், மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள பிரான்ஸ் விமானப்படைத் தளத்தில் இந்த விமானங்கள் நிறுத்தப்பட்டன.

ரபேல் விமானங்கள் இன்று தரையிறங்குவதை முன்னிட்டு, அம்பாலா விமான நிலையத்தை சுற்றி, 4 கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையம் தரையிறங்கும் போது, படம் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 3 கி.மீ., சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களை வரைவேற்க இரவு 7 மணிக்கும் 7.30 மணிக்கும் இடையில் வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்குமாறு ஹரியானா மாநில அரசு அம்பாலா மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்திலேயே ரபேல் விமானங்களின் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *