Monday , September 28 2020
Breaking News

முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை.

முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

நஜிப் ரசாக் மலேசிய பிரதமராக இருந்த போது, 2015-ம் ஆண்டு அரசு முதலீட்டு நிதியான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபா ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது, 273 மில்லியன் டொலர் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன.

மேலும் அவர் மீது அரசுத்தரப்பு நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த இரு ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நஜிப் ரசாக் மீதான 7 குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதால், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டுகள் மற்றும் அபராதம், மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள், மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள் என அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சிறைத் தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி நஸ்லான் உத்தரவிட்டார்.

அதன்படி அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 50 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *