Wednesday , September 30 2020
Breaking News

மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை 269 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வந்தது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதில் இரு அணிகளும் ஆர்வத்துடன் இருந்தன.

நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 369 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

பின்னர் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்சில் 197 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 172 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி2 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 2-வது இன்னிங்சை முடித்துக் கொண்டது.

பின்னர் 399 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களம் இறங்கியது.
3-வது நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள்2 விக்கெட் இழப்பிற்கு 10 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
4-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கிய போது. ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணி திணறியது.

2-வது இன்னிங்சில் 37.1 ஓவர்கள் மட்டுமே விளையாடிய 129 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இஙகிலாந்து 269 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.
2-வது இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் ஐந்து விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *