Monday , September 28 2020
Breaking News

நவ்பர் மௌலவியே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என்று, பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நவ்பர் மௌலவியே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என்று, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய சஹரான் ஹாசிம், இந்த தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரி அல்ல என்றும் நிலந்த ஜயவர்த்தன கூறியுள்ளார்.

கட்டாரில் 19 வருடங்களாக வசித்து சர்வதேச தொடர்புகளை பேணிவந்த நவ்பர் மௌலவி என்பவரே இந்தத் தாக்குதலின் சூத்திரதாரி எனவும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்பது குறித்து பத்து மாதங்களுக்கு முன்னரே தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிசிடம் தாம் தெரிவித்திருந்ததாகவும் நிலந்த ஜயவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *