Monday , September 28 2020
Breaking News

வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி 1.2 மில்லியன் புதிய வாக்காளர்கள் முதல் முறையாக பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி 1.2 மில்லியன் புதிய வாக்காளர்கள் முதல் முறையாக பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளுக்கு அமைய, 2015 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், 12இலட்சத்து 19 ஆயிரத் 395 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை பொதுத் தேர்தலில் 1 கோடி 62இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றும், இவர்களில் 31.95 சதவீமானோர், இளம் வாக்காளர்கள் என்றும்தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

கடந்த நொவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடந்த பின்னர், 271,789 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகபட்சமாக38,806 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவ மாவட்டத்தில், குறைந்தபட்சமாக 4,666 வாக்காளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடையில் உள்ள புதிய வாக்காளர்களில் 47 வீதமானோர் வாக்களிக்க ஆர்வமின்றி இருக்கின்றனர் என்று பேஸ்புக் மூலம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *