Wednesday , September 30 2020
Breaking News

இனி இந்த பூமியில் போர் நடக்காது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.

இனி இந்த பூமியில் போர் நடக்காது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.

கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டு வர ஏற்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் 67-வது ஆண்டு விழா வடகொரியாவில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி வடகொரிய மக்களை ஆரவாரப்படுத்தியுள்ளார்.

வடகொரியா எதிரி நாடுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்று கூறிய அவர், வடகொரியாவின் நம்பகமான திறன் மிக்க அணு ஆயுதங்களால் உலகில் இனி போர் நடக்காத சூழல் உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் எப்போதும் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், வடகொரிய ஜனாதிபதி கிம் மேலும் கூறினார்.

அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன், இனி உலகில் போர் நடக்காது என்று கூறியிருப்பது, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *