Thursday , September 24 2020
Breaking News

ஸ்பெயினுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஜெர்மனி அரசு, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஸ்பெயினுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஜெர்மனி அரசு, தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஜெர்மனியில் சில இடங்களில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஜெர்மனி அரசு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஸ்பெயினுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஜெர்மனி அரசு தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து ஜெர்மனி வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்பெயினில் கேட்டலோனியா, அரகான், நவ்அர்ரா ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சமீப நாட்களாக அங்கு தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *