Monday , September 28 2020
Breaking News

பொதுத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறையும் – கண்காணிப்பு அமைப்பு கணிப்பு.

எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்கும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று எதிர்வு கூறியுள்ளது.

தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இது தொடர்பாக நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் சூழலால் அதிகளவு வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்வதை தவிர்க்கக் கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 83சத வீத வாக்குப்பதிவு இருந்த போதும், இம்முறை பொதுத் தேர்தலில் மிக குறைந்தளவு வாக்குகளே பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலினால் கணிசமான முதியவர்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றும், அதேவேளை, தெரிவு செய்வதற்கு இருக்கின்ற வாய்ப்புகள் குறித்த ஏமாற்றத்தினாலும் பலர் வாக்களிப்பை

தவிர்க்க நினைக்கின்றனர் என்றும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *