Tuesday , September 29 2020
Breaking News

576 கோடி ரூபா ரபேல் போர் விமானத்தை 1670 கோடி ரூபாவுக்கு வாங்கியது ஏன்? – இந்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி

576 கோடி ரூபா மதிப்புள்ள ரபேல் போர் விமானத்தை 1670 கோடி ரூபாவுக்கு ஏன் வாங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக 5 விமானங்கள் நேற்று இந்தியாவை வந்தடைந்துள்ளன.

ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மத்திய அரசையும் குற்றம்சாட்டியுள்ளதுடன் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

576 கோடி ரூபா மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாவுக்கு வாங்க வேண்டுமா?

126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்கியது ஏன்? இந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனத்திற்கு பதிலாக, வங்குரோத்து நிலையில் உள்ள அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க முடியுமா? என்றும் ராகுல் காந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *