Monday , September 28 2020
Breaking News

சிங்கப்பூர் அமைச்சரவை அறிவிப்பு – ஐந்து தமிழர்களும் இடம்பிடித்தனர்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்துள்ளார். இதில் ஐந்து தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சிங்கப்பூரில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி 83 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில், புதிய அமைச்சரவை தொடர்பான விபரங்களை பிரதமர் லீ சியன் லூங் நேற்று வெளியிட்டார்.

இதில் மூந்து தமிழர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, கா. சண்முகம், எஸ். ஈஸ்வரன், கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த அமைச்சரவையில் வகித்த பதவிகளைத் தொடர்ந்து வகிக்கின்றனர்.

மேலும் இந்திராணி ராஜா பிரதமர் அலுவலக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், தேசிய வளர்ச்சி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த 7 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *