Monday , September 28 2020
Breaking News

மான்செஸ்டரில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணி இடையிலான டெஸ்ட் போட்டி – 5ஆம் திகதி ஆரம்பம்.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 5ஆம் திகதி தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றுள்ளது.

இந்த நிலையில், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் வரும் 5ஆம் திகதி தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது அப்பாஸ், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் நடந்த மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் 2-1என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையில் வலுவான நிலையிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்திய உற்சாகத்துடனும் உள்ள இங்கிலாந்து அணி, இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *