Friday , September 25 2020
Breaking News

1 தொடக்கம், 13 வரையான அனைத்து மாணவர்களுக்குமான கல்வி செயற்பாடுகள் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்.

கொரோனா தொற்று காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்த தரம் 1 தொடக்கம், 13 வரையான அனைத்து மாணவர்களுக்குமான கல்வி செயற்பாடுகள் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அட்டவணை ஒன்றும் கல்வி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலைகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 அல்லது அதற்கு குறைவாக உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கொண்டதாக கல்வி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.

அனைத்து பாடசாலைகளிலும் இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்கத் தேவையான வசதிகள் இருந்தால், அனைத்து தரங்களை சேர்ந்த மாணவர்கனிள் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு அதிகமாக இருப்பின், ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள்.

தரம் 5 மாணவர்களுக்கு வாரத்தின் முழு நாட்களும் பாடசாலை நடத்தப்படும். அவர்களுக்கான பாடசாலை கால எல்லையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், திங்கட்கிழமைகளில் தரம் 1 மற்றும் தரம் 5 மாணவர்களுக்கும், செவ்வாய்கிழமைகளில் தரம் 2 மற்றும் தரம் 5 மாணவர்களுக்கும், புதன்கிழமைகளில் தரம் 3 மற்றும் தரம் 5 மாணவர்களுக்கும், வியாழக்கிழமைகளில் தரம் 4 மற்றும் தரம் 5 மாணவர்களுக்கும், வெள்ளிக்கிழமைகளில் தரம் 4 மற்றும் தரம் 5 மாணவர்களுக்கும் கல்வி செயற்பாடுகள் இடம்பெறும்.

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு அதிகமான இரண்டாம் நிலை பாடசாலைகளில், தரம் 6 தொடக்கம் 13 வரையிலான மாணவர்களை அழைக்கும் நடைமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திங்கட்கிழமைகளில் தரம் 6,10,11,12 மற்றும் 13 மாணவர்களுக்கும், செவ்வாய்கிழமைகளில் தரம் 7,10,11,12 மற்றும் 13 மாணவர்களுக்கும், புதன்கிழமைகளில் தரம் 8,10,11,12 மற்றும் 13 மாணவர்களுக்கும், வியாழக்கிழமைகளில் தரம் 9,10,11,12 மற்றும் 13
மாணவர்களுக்கும், வெள்ளிக்கிழமைகளில் தரம் 9,10,11,12 மற்றும் 13 மாணவர்களுக்கும், கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 6,7,8 9 மாணவர்களுக்கு காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 1:30 மணி வரை வகுப்புகள் இடம்பெறும்.

தரம் 10,11,12 மற்றும் 13 மாணவர்களுக்கு காலை 7:30 மணி தொடக்கம் பிற்பகல் 3:30 வரையும் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *