Tuesday , September 29 2020
Breaking News

அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது – மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தகவல்

அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் 98 சத வீதமும், களுத்துறை மாவட்டத்தில் 97 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளன.

அஞ்சல் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மூலமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில், 15,200 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர் என்றும் அவர்களில் 14,907 பேர் வாக்களித்துள்ளர் என்றும் திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி அசங்க அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் 98 சதவீதமான அஞ்சல் மூல வாக்காளர்கள் இம்முறை வாக்களித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 37,777 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர் என்று குறிப்பிட்ட களுத்துறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி U.D.C. ஜெயலால் அவர்களில் 36,612 பேர் வாக்களித்துள்ளர் என்றும் தெரிவித்துள்ளார்.

இங்கு 97 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *