Friday , September 25 2020
Breaking News

வளர்ச்சிக்கான நல்லுறவு என்ற பெயரில், ஒரு நாடு, மற்றொரு நாட்டை சார்ந்திருக்க நிர்பந்திக்கப்படுகிறது – இந்தியப் பிரதமர் குற்றச்சாட்டு.

வளர்ச்சிக்கான நல்லுறவு என்ற பெயரில், ஒரு நாடு, மற்றொரு நாட்டை சார்ந்து இருக்க நிர்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எனினும் நல்லுறவு பாராட்டும் நாடுகளை மதிப்பதே, இந்தியாவை அடிப்படை கொள்கையாக பின்பற்றப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மொரீஷியசில், புதிதாக கட்டப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி
மற்றும் அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர்,வீடியோ கொன்பஓட்டங்ஸ் மூலம் நேற்று திறந்து வைத்தனர்.

அந்த நிகழ்வில் உரையாற்றிய போதே, இந்தியப் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

“வளர்ச்சிக்கான நல்லுறவு என்ற பெயரில், ஒரு நாடு, மற்றொரு நாட்டை சார்ந்து இருக்க நிர்பந்திக்கப்படுவதை தான், வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, எங்களுடன் நல்லுறவு பாராட்டும் நாடுகளை மதிப்பதே, அடிப்படை கொள்கையாக பின்பற்றப்படுகிறது.

நாங்கள் படித்த, வளர்ச்சிக்கான பாடங்களை பகிர்வதே, நட்பு நாடுகளுக்கு நாங்கள் தரும் ஊக்கமாக இருக்கும் என, நம்புகிறோம். அதனால் தான், எங்கள் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு என்பது, நிபந்தனை அற்றதாக உள்ளது.

இந்திய கடல் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து நாடுகளும், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில், இந்தியா தெளிவாக உள்ளது.

நட்புறவு நாடுகளுக்கு, நிகழ் காலத்தில் உதவுவது மட்டுமில்லாமல், சிறப்பான எதிர்காலம் அமையவும் உதவுகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு, இலங்கை போன்ற நாடுகள் சீனாவிடம் வாங்கிய பெருமளவு கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருவதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்தியப் பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அமைந்திருந்ததாக, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *