Friday , September 25 2020
Breaking News

இராணுவத் தளபாட கொள்வனவு ஒப்பந்தத்தில் நிகழ்ந்த ஊழல்.

இராணுவத் தளபாட கொள்வனவு ஒப்பந்தத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக, சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி உள்ளிட்ட 4 பேருக்கு புதுடில்லி உயர்நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இராணுவ ஒப்பந்தத்தில் இராணுவத்திற்கு ஆயுதங்கள் மற்றும் தளபாடங்கள் வாங்கியதில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக, டெகல்கா.கொம் என்ற இணைய தளம் அம்பலப்படுத்தியிருந்தது.

இதனடிப்படையில் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த கோபால் பச்சர்வால் மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி.முர்கை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுப் பிரிவு, ஜெயா ஜெட்லி உள்ளிட்டவர்கள் மீது புதுடில்லி உயர்நீதிதமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் தீர்ப்புநேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, ஜெயா ஜெட்லி உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய உள்ளதாக ஜெயா ஜெட்லி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *