Wednesday , September 30 2020
Breaking News

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவும் விண்கலத்தை ஏவியது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனம், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவி உள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவேரல் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

செவ்வாய் கிரகம் இம்மாதம் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவும் விண்கலத்தை செலுத்தி உள்ளது.

அட்லாஸ் 5 என்ற ரொக்கட் மூலம் பிரிசெர்வென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலத்துடன், 6 சக்கர வாகனமும், சிறிய ரக ஹெலிகொப்டரும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விண்கலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். செவ்வாய் கிரகத்தை 687 நாட்கள் வரை இது ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதுடன் மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வரவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *