Monday , September 28 2020
Breaking News

அயர்லாந்து அணியை, இங்கிலாந்து அணி இலகுவாக வீழ்த்தியுள்ளது.

சவுத்தாம்ப்டனில் நடந்த முதலாவது, ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணியை, இங்கிலாந்து அணி இலகுவாக வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் அயர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கியடி அயர்லாந்து அணி 28 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

எனினும், அயர்லாந்து அணி வீரர் காம்பர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 59 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி கட்டத்தில் மக் பிரின் 40 ஓட்டங்களை எடுத்தார்.

எனினும், அயர்லாந்து அணி 44.4 ஓவரில் 172 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து சார்பில் வில்லே 5 விக்கெட்டும், சாகிப் முகமட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

இங்கிலாந்து வீர்ர்கள் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடத் தொடங்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் வீழ்ந்தன.

சாம் பில்லிங்சும், இயன் மார்கனும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
சாம் பில்லிங்ஸ் அரை சதமடித்தார். அவர் 67 ஓட்டங்களுடனும், இயன் மார்கன் 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக வில்லே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *