Monday , September 28 2020
Breaking News

மக்கள் இனி கொரோனாவுடன் தான் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்

மக்கள் இனி கொரோனாவுடன் தான் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் இரண்டு கோடியை எட்டும் என்று தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, 6 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் இதுவரை இந்த தொற்றினால் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் ஜெனிவா நகரில் வீடியோ கொன்பஓட்டங்சிங் மூலம் நடந்த மாநாட்டில் உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று கூறியுள்ளார்.

எனினும், கொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்கை முடிந்து விட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் இதுவரை முழு வெற்றி அடையப்படாத நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரின் இந்தக் கருத்து மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *