Monday , September 28 2020
Breaking News

சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை

சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை வருவதற்கு ஓகஸ்ட் 15-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அதையடுத்து,, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ளன.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடம் வகிக்கிறது. சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையம் தடைவிதித்துள்ளது.

இந்த தடை ஓகஸ்ட் 15-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக என கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

சென்னையுடன் டெல்லி, மும்பை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமான சேவைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை ஓகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று கொல்கத்தா விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *