Thursday , September 24 2020
Breaking News

டெல்லியில் ஊரடங்கு தளர்வை அறிவித்த முதல்வர் – ஆளுநர் அனுமதி மறுத்ததால் மோதல்.

டெல்லியில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தும் மாநில
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவுக்கு, மாநில ஆளுநர் ஒப்பதல் வழங்க மறுத்துள்ளதால் மோதல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் இன்று முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 'மெட்ரோ' ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான கூடங்கள், கலை அரங்கங்கள் இயங்காது. அரசியல், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சமூக,- கலாச்சார கூட்டங்களுக்கான தடை உத்தரவு தொடரும் என்று இந்திய மத்திய அரசு அறிவித்திருந்த்து.

இந்தநிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் கட்ட தளர்வுகளில் உணவகங்கள், வாரச்சந்தைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கு துணை நிலை ஆளுநர் ர் அனில் பைஜால் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மையின் மத்திய அரசின் பிரதிநிதி துணை நிலை ஆளுநர் என்பதால் டில்லி அரசு பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த தடை விதிக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் டில்லியில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *