Thursday , September 24 2020
Breaking News

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவியில் 7000 மாணவிகள் கா்ப்பமாகியுள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவியில் கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்த கடந்த 5 மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்ட நேரத்தில் 7000 மாணவிகள் கா்ப்பமாகியுள்ளனர் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மலாவியிலும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டது.

ஊரடங்கு அமுலில் இருந்த கடந்த 5 மாதங்களிலும், அங்குள்ள 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 7,000 மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக மலாவி அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தநாட்டின் இளைஞர் சுகாதார சேவை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் மாலிபா கருத்து வெளியிடுகையில், கடந்த ஐந்து மாத காலமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நேரத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

இந்த சூழலில் 7,000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர்.

பாலோம்பே நகரில் மட்டும் 1000 மாணவிகளும், மிசம்பா மற்றும் நசான்ஜே நகரில் 724 மாணவிகளும் கர்ப்பம் அடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மலாவியின் கல்வித் துறை இயக்குனர் பெனிடிக்டோ கோன்டோவே கூறுகையில், கொரோனா பரவல் நேரத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஊரடங்கின் போது கடந்த 3 மாத காலத்தில் கென்யாவில் மட்டும் 1,50,000
சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்றும் இது சராசரி எண்ணிக்கையை விட 40 சதவீதம்
அதிகம் எனவும், கென்ய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *