Tuesday , September 29 2020
Breaking News

இங்கிலாந்தை வீழ்த்த இளம் சிங்கங்கள் தயார் – என்கிறார் பாகிஸ்தான் அணித் தலைவர்.

இங்கிலாந்து அணியைத் திணறடிக்க 17 மற்றும் 20 வயது இளம் சிங்கங்களை தயார்படுத்தியுள்ளோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அசார் அலி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு பாகிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

முதல் டெஸ்ட் வரும் ஐந்தாம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணி கப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.

ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகியோர் அணியில் பெற்றிருப்பது அதிர்ஷ்டம் என்றும், இங்கிலாந்து மண்ணிற்கு ஏற்றபடி அனுபவம் பெற்றுள்ள முகமது அப்பாஸை பெற்றுள்ளது சிறப்பானது என்றும் அசார் அலி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், தமது வீரர்கள் நல்ல ஆட்டத் திறனுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

லொக்டவுன் காரணமாக வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது ஒரு சவாலான அனுபவம் என்றும் இதனால் முகாமில் பந்து வீச்சாளர்களுக்கு சற்று கடினமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மெதுவாக பந்து வீசிய அவர்கள் பின்னர் பயிற்சி மூலம் பழைய நிலையை அடைந்தனர் என்றும் பாகிஸ்தான் அணி தலைவர் அசார் அலி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *