Tuesday , September 29 2020
Breaking News

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய ஆவணம்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டு முறைகள் அடங்கிய ஆவணம் சுகாதார அமைச்சினால் நேற்று நாடாளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சபையில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமர்ந்திருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆசன ஒழுங்கில் மாற்றம் இருக்காது என்றும், நாடாளுமன்ற செயலாளர் தம்மிக திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்னொரு உறுப்பினரின் ஆசனத்தில் அமருவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் எந்த நேரமும் முக கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும் சபையில் உரையாற்றும் போதும், அதனை அகற்றக் கூடாது என்றும் சுகாதார வழிகாட்டு முறையில் கூறப்பட்டுள்ளது.

ஆசனங்களில் இல்லாத போது, உறுப்பினர்கள் ஒரு மீற்றர் இடைவெளியிலேயே நகர்ந்து செல்ல வேண்டும்என்றும், வலியுறுத்தப்பட்டுள்ளது.

கைகுலுக்குதல் மற்றும் கட்டியணைத்தலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தொட்டு வாழ்த்துக் கூறுவதற்கும், ஒருவரின் கருவிகளை மற்றவர் பயன்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்துக்குள் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர கொரோனா தடுப்புக்கான ஏனைய பொதுவான சுகாதார வழிகாட்டு முறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக திசநாயக்க மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *