Tuesday , September 29 2020
Breaking News

களனி பகுதியை சேர்ந்த காயத்ரி டில்ருக்க்ஷி என்ற விரிவுரையாளரே யானை தாக்கி, உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் யானை தாக்கி படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

களனி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய காயத்ரி டில்ருக்க்ஷி என்ற விரிவுரையாளரே யானை தாக்கி, உயிரிழந்தவராவார்.

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த குறித்த விரிவுரையாளர் விகாரைக்குச் சென்று திரும்பிய போது, அண்மையில் யானை தாக்கி படுகாயமடைந்திருந்தார்.

தலையில் பலத்த காயமடைந்த அவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு சில நாட்களுக்கு முன்னர் தலையில் சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தநிலையில்,, குறித்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்று நேற்று உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *