Tuesday , September 29 2020
Breaking News

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர விளக்கமறியலில் – நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பகா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு ஒன்றில் திரிபுபடுத்தப்பட்ட சாட்சியங்களை அளித்தார் என்ற குற்றச்சாட்டில், சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்றுக்காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்ட அவர், 8 மணி நேரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நேற்று இரவு கம்பகா மாவட்ட நீதிவான் முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போதே அவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *