Tuesday , September 29 2020
Breaking News

ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுக்களும் நடத்தப் போவதில்லை.

ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுக்களும் நடத்தப் போவதில்லை என, ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதச் சோதனை தொடர்பாக, அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் மோசமடைந்து வருகிறது.

இந்த நிலையில் தெஹ்ரானில் கருத்து வெளியிட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.

சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக உள்ள ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் கூறியுள்ள அவர் , ஈரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதும், ஏவுகணை மற்றும் அணுசக்தி சோதனைகளை நிறுத்துவதும் தான் அமெரிக்காவின் நோக்கமாகவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய திறன்களை நம்புவதும், எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் அமெரிக்காவின் அழுத்தங்களை எதிர்க்க உதவும் என்று குறிப்பிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத் தலைவர், ஏவுகணைகள் சோதனை, அணு ஆயுதச் சோதனை தொடர்பாக இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *