Wednesday , September 30 2020
Breaking News

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக, இந்திய- இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக, இந்திய- இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டின்ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தென்ன ஆகியோருடன் இந்திய தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஷ் சூட் இந்தப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையிலான இந்தப் பேச்சுக்கள் கடந்தவாரம் தனித்தனியாக இடம்பெற்றதாக இந்திய தூதரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரஸ்பர மற்றும் இருதரப்பு நலன்களை உள்ளடக்கிய பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டப்பட்டதாகவும் இந்திய தூதரக அறிக்கை தெரிவித்துள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதி பூண்டிருப்பதாக இரு தரப்புகளும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *