Tuesday , September 29 2020
Breaking News

பொதுத் தேர்தலுக்கான நான்கரை இலட்சம் வாக்காளர் அட்டைகள் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை

வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான நான்கரை இலட்சம் வாக்காளர் அட்டைகள் இன்னமும் விநியோகிக்கப்படாமல் அஞ்சலகங்களில் தேங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்காளர் அட்டைகள் விநியோகத்தை அஞ்சலகங்கள், கடந்த மாதம் 29ஆம் திகதியுடன் முடித்துக் கொண்டுள்ளன.

எனினும், 450,000 வாக்காளர் அட்டைகள் இன்னமும் விநியோகிக்கப்படாமல் அஞ்சலகங்களில் தேங்கிக் கிடப்பதாக, அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், தமது பகுதியில் உள்ள அஞ்சலகத்துக்குச் சென்று உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அஞ்சலகங்களில் உள்ள வாக்காளர் அட்டைகளை வழங்குவதற்காக தேர்தல் தினமான வரும் புதன்கிழமை மாலை 5 மணி வரை அஞ்சலகங்கள் திறந்திருக்கும் என்று அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *