Tuesday , September 29 2020
Breaking News

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தியவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியான, கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்ட அனைவரும், நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்கும் பரிசோதனையில் தீவிரமாக உள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய இரண்டும் இணைந்து கொரோனாவை குணப்படுத்த கோவாக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன.

இந்த மருந்தினை 12 வெவ்வேறு மருத்துவமனைகளில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னையை அடுத்த காட்டாங்குளதத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய திட்டடமிடப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரானா மருத்துவமனையில் பரிசோதனைக்குட்பட்டவர்களை மருத்துவர் அஜீத் பிரதாப் சிங் ஆய்வு செய்து வருகிறார்.

ஆய்வின் முடிவில் அனைவரும் பாதுகாப்பாகவும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த திங்களன்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எஸ்.யு.எம்.,மருத்துவமனையில் தடுப்பூசியை போடுவதில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் பரிசோதனைக்குப்பின் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் வெங்கட் ராவ் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ரோடாக்கில் ஜூலை 17 ல் நடந்த பரிசோதனையில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் சவீதா வர்மா தெரிவித்தார்.

முதற்கட்டத்தில் மொத்தம் 375 பேர் பரிசோதனையில் கலந்து கொண்டனர். மேலும் 3,500 தன்னார்வலர்கள் பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைக்கு உட்பட்ட அனைவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *