Wednesday , September 30 2020
Breaking News

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், தமிழ் மொழியிலும் பிரசாரம் செய்ய திட்டம்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடன், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் வரும் நொவம்பர் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில், சுமார் 28 இலட்சம் இந்தியர்கள் உள்ளதால், ஜனாதிபதி தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள், முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தியர்களின் வாக்குகளை தன் பக்கம் இழுக்க இரண்டு பிரதான கட்சிகளும் கடும் போட்டி போடுகின்றன.

இந்த நிலையில், பிடனின் பிரசாரக் குழு, பெரிய அளவிலான பிரசாரத் திட்டத்தை 14 இந்திய மொழிகளில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இதில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, உருது, கன்னடம், மலையாளம், ஒரியா, மராத்தி உள்ளிட்ட மொழிகளும் அடங்குவதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *