Tuesday , September 29 2020
Breaking News

மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறு யாழ். ஆயர் வேண்டுகோள்.

வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டாம் என்றும், கொரோனாவிற்குப் பயந்து வாக்களிக்காமல் இருந்து விடவேண்டாம் என்றும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும் எனத் தெரிவித்துள்ள அவர், சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய, நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முகக்கவசங்களை அணிந்து சென்று சமூக இடைவெளியைப் பேணி வாக்களித்து விட்டு விரைவாக வீடுகளுக்குத் திரும்புமாறும் யாழ். ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எவரது தலையீடோ தூண்டுதலோ இன்றி, யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை ஒவ்வொருவரும் சுயமாகவும் சுதந்திரமாகவும் எடுக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமது நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *