Monday , September 28 2020
Breaking News

இலங்கை உள்ளிட்ட 31 நாடுகளை அதிக ஆபத்துள்ள நாடுகளாக பிரகடனம் செய்துள்ள குவைத்.

இலங்கை உள்ளிட்ட 31 நாடுகளை அதிக ஆபத்துள்ள நாடுகளாக பிரகடனம் செய்துள்ள குவைத், இந்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானப் போக்குவரத்துகளை முற்றாக தடை செய்துள்ளது.

குவைத் நாட்டின் சிவில் விமான போக்குவரத்துப் பணியகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள கொரோனா தொடர்பான அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், லெபனான், சீனா, ஈரான், மெக்சிகோ, ஈரான், ஈராக்,பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை ஆபத்து குறைந்த நாடுகளில் இருந்து 30 வீதம் விமானப் போக்குவரத்துகளை மீள ஆரம்பிக்கவும் குவைத் அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில், அதிக ஆபத்துள்ள 31 நாடுகளில் இலங்கையையும் குவைத் உள்ளடக்கியிருப்பது கொழும்பு அதிகார மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியமும்,இலங்கையை ஆபத்து அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இணைந்திருந்த போதும் பின்னர் அதிலிருந்து நீக்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *