Tuesday , September 29 2020
Breaking News

ஊழல் ஒழிந்தால் தான் நான் முக கவசம் அணிவேன் என மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஓபரேடர் தெரிவித்துள்ளார்.

ஊழல் ஒழிந்தால் தான் நான் முக கவசம் அணிவேன் என மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஓபரேடர் தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருக்க சமூக விலகல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன.

எனினும் சில நாடுகளின் தலைவர்கள் முக கவசம் அணிவதற்கு மறுத்து வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் இது நிலைப்பாட்டில் இருந்த போதும் அண்மையில் அவரும் முக்கவசம் அணிய ஆரம்பித்துள்ளார்.

அதேவேளை, மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஓபரேடர், நாட்டில் ஊழல் ஒழிந்தால் மட்டுமே தான் முகக்கவசம் அணிவேன் என்று அடம்பிடிக்கிறார்.

இந்த நாட்டில் ஊழல் விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் முக கவசம் அணிவேன். பொருளாதாரம் மேம்பட முக கவசம் ஒரு காரணமாக இருந்தால் அதை உடனே அணியவும் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *