Saturday , September 26 2020
Breaking News

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் போராட்டம்

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சில நாட்களாக தொற்று மேலும் பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளுடன் பொதுமக்கள் பெர்லினில் உள்ள பிரான்ட்பர்க் கேட்டிலிருந்து டியர்கார்டன் பார்க் வரை பேரணி நடத்தினர்.

இதில் பங்கேற்ற ஒரு சிலர் மட்டுமே முக கவசம் அணிந்திருந்தனர். பேரணியில் கலந்து கொண்ட சிலர் எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று குரல் எழுப்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *