Tuesday , September 29 2020
Breaking News

திருகோணமலை சீனக்குடாவில் 80 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது .

திருகோணமலை சீனக்குடா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த ஒருவர் விளக்கமறியலில்

திருகோணமலை சீனக்குடா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த ஒருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(2) உத்தரவிட்டார்.
கண்டிவீதி,சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஹேரொயின் போதைப் பொருள் விற்பனை செய்துவருவதாக சீனக்குடா போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை 80 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் (வாசஸ்தலம்) முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *