Tuesday , September 29 2020
Breaking News

வல்வைப் படுகொலையின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் – தீருவில் வெளியில் அஞ்சலி.

இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட, வல்வைப் படுகொலையின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இடம்பெற்றுள்ளது.

1989ம் ஆண்டு ஓகஸ்ட் 2ஆம் திகதி வல்வெட்டித்துறைப் பகுதியில், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 84 அப்பாவிப் பொதுமக்களை இந்திய இராணுவத்தினர் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்திருந்தனர். இந்தச் சம்பவத்தில் பெருமளவு வீடுகள், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்திய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைகளை நினைவு கூரும் வகையில், நேற்று மாலை, ஏழு மணியளவில் நடந்தநிகழ்வில், எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *