Thursday , September 24 2020
Breaking News

அமெரிக்கவில் தரையிறக்க வாகனம் கடலில் மூழ்கி 8 மரைன் படையினர் பலி.

அமெரிக்காவின் கலிபோர்னியா கடல் பகுதியில் இராணுவப் பயிற்சி ஒன்றின் போது, ஏற்பட்ட விபத்தில் ஏழு அமெரிக்க மரைன் படையினரும் மாலுமி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தரையிறக்க தாக்குதல் வாகனம் ஒன்று கடந்த வியாழக்கிழமை கடலில் மூழ்கி இந்த விபத்து ஏற்பட்டது, 40 மணி நேரம் நடத்தப்பட்ட தேடுதல்களை அடுத்து அதில் இருந்த ஏழு அமெரிக்க மரைன் படையினரும் மாலுமி ஒருவரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது, இந்த விபத்தில் மேலும் எட்டு மரைன் படையினர் மீட்கப்பட்டனர்.

எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டா என்றும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுஎஸ்எஸ் சோம்செற் என்ற தரையிறக்க கப்பலில் இருந்து தரையிறக்க தாக்குதல் வாகனம் ஒன்று சான் கிளமென்ற் தீவில் மரைன் படையினரை தரையிறக்க முயன்ற போது அந்த தரையிறக்க வாகனத்துக்குள் கடல் நீர் உட்புகுந்து மூழ்கியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சுமார் 1000 சதுர மைல் பரப்பளவில் தேடுதல்களை நடத்திய போதும், குறித்த தரையிறக்க வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *