Monday , September 28 2020
Breaking News

ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் செப்ரெம்பர் 19 ஆம் திகதி தொடக்கம், நொவம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும்

ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் செப்ரெம்பர் 19 ஆம் திகதி தொடக்கம், நொவம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நொவம்பர் ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *