Saturday , September 26 2020
Breaking News

உறுதியான தலைமைத்துவத்துக்கு ஆணை தாருங்கள் – விக்னேஸ்வரன் கோரிக்கை.

இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழலற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவமே இப்போது அவசியம் என்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர் நேற்று மாலை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நடந்த இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

உறுதியான தலைமைத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், இதற்கான அதிகாரத்தையும், ஆணையையும், ஆதரவையும் இந்த

தேர்தலின் ஊடாக வழங்கி தமது அரசியலின் பங்காளிகளாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு- கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் தனது தலைமையிலான கூட்டணியை அமோக வெற்றியடையச் செய்யுமாறும் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *