Monday , September 28 2020
Breaking News

உலக கிண்ண விவாதப் போட்டியில் கனடாவிடம் தோல்வியடைந்தது இலங்கை அணி

உலக கிண்ண பாடசாலை விவாத இறுதிப் போட்டியில், கனடாவுடன் மோதிய இலங்கையின் தேசிய விவாத அணி 8-1 என்ற அடிப்படையில், தோல்வியடைந்துள்ளது.

அரையிறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை 7-0 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டு, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இலங்கை அணி, உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7 மணியளவில், கனடா அணியுடன் மோதியது.

கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்களான சாலெம் சுமந்திரன், ஜானுவல் டி சில்வா ஆகியோரும், கொழும்பு சர்வதேச பாடசாலையில் இருந்து ஜஸ்மின் மார்க்கண்டு மற்றும் ராகுல் டி சில்வா ஆகியோரும், ஆனந்தா கல்லூரியில் இருந்து சனிந்து ரத்னாயக்க, என்ற மாணவனும், கொழும்பு மகளிர் கல்லூரியில் இருந்து ரேய்கா விமலசேகர என்ற மாணவியும் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

மெக்சிகோவில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டி, கொரோனா தொற்று காரணமாக, இணையவழி நேரலை மூலம் நடத்தப்பட்டிருந்தது. இதில், கனடா அணி வெற்றியீட்டிய நிலையில் இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

எனினும், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்ட நாடுகள் பிரிவில் சிறந்த அணியாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்தப் போட்டித் தொடரின் சிறந்த பேச்சாளராக சாலெம் சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை விவாத உலக கிண்ணத்துக்கான போட்டியில் இந்த ஆண்டு 68 நாடுகள் பங்கேற்றிருந்த நிலையில், இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *