Friday , September 25 2020
Breaking News

அமெரிக்காவில் கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி ட்ரம்ப் தோல்வியடைந்து விட்டார் – அமெரிக்கர்கள் கருத்து.

அமெரிக்காவில் கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி ட்ரம்ப் தோல்வியடைந்து விட்டார் என்று மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 50 இலட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரிழப்பு எண்ணிக்கையும் 2 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தை ட்ரம்ப் கையாளும் விதம் குறித்து அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

இதில் மூன்றில் 2 பங்கு அமெரிக்கர்கள் ட்ரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளும் விதத்தை ஏற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 29, 30 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 730 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அவர்களில் 66 சதவீதம் பேர் ஜனாதிபதி ட்ரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளுவதில் தோல்வியை சந்தித்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கறுப்பின இளைஞன் ஜோர்ஜ் பிளாயிட் பொலிசாரால் கொல்லப்பட்ட விவகாரத்தையும் ஜனாதிபதி ட்ரம்ப் முறையாகக் கையாளவில்லை என மூன்றில் 2 பங்கு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *