Monday , September 28 2020
Breaking News

ஈரானின் ஷிராஸ் நகரில், கடந்த 2008-ம் ஆண்டு குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய ஒருவர் கைது.

ஈரானின் ஷிராஸ் நகரில், கடந்த 2008-ம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடத்திய அமெரிக்க பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானில் பயங்கரவாத செயல்களை ஈடுபட்டு வந்த ஜம்ஷிட் ஷர்ம்ஹாட் என்ற பயங்கரவாதி அவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிங்டம் அசம்பிளி ஆஃப் ஈரான் என்னும் இவரது அமைப்பு தொடர்ந்து ஈரான் அரசுக்கு
எதிராகப் போராடி வந்தது. ஈரானில் உள்நாட்டு கலவரத்தை தூண்டும் விதத்தில் இந்த பயங்கரவாத அமைப்புக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்துள்ளது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது, மேலும், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி ஜம்ஷிட் நடத்திய தாக்குதலில் ஷிராஸ் மசூதியில் 14 பேர் கொல்லப்பட்டனர். என்றும் 215 பேர் காயமடைந்தனர் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

தங்களுக்குத் தேவைப்படும்போது தீவிரவாதிகளுக்கு நிதி அளித்து தங்களது தேவை நிறைவடைந்தவுடன் தீவிரவாதிகளை எதிர்ப்பது அமெரிக்காவுக்கு வழக்கமாகி விட்டது என்றும் ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *